திருமண சீஸனாக இருக்கிறதோ இல்லையோ, அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலாவருவது வழக்கமாகிவிட்டது.காரணம்,திருமணத்தில் வினோதமான சம்பவங்கள் நிகழ்ந்துருக்கலாம் அல்லது வினோதமாக அந்த திருமணம் நடந்துருக்கலாம் ,ஏன் வினோத காரணத்திற்காக நின்றுபோன திருமணங்களும் உண்டு.
தற்போது மற்றொரு ரசிக்கும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் மணமக்கள் இருவரும் மேடையில் அமர்ந்துள்ளனர் அத்துடன் திருமண சடங்குகள் நடைபெற்று வருகிறது.ஒரு கட்டத்தில் மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கவேண்டும் .
அப்போது,குங்குமம் வைக்கும் சாக்கில் மணமகளின் கன்னத்தில் முத்தமிட்டு விடுகிறார் மணமகன்.அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்க தன் கணவன் கொடுத்த முத்தத்தில் ஒரு நிமிடம் மணமகளின் முகம் சிவக்க தொடங்கியது.
கூடிருந்தவர்களை ரசிக்கவைத்த மணமகனின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.