எரிமலை விபத்தில் உயிர்பிழைத்த தன் அனுபவத்தை வெளிஉலகிற்கு பகிர்ந்துகொள்ளும் நபர்கள் குறைவே.இந்நிலையில் எரிமலை விபத்து ஒன்றில் 70 சதவீத உடல் எறிந்த நிலையில் மீட்கப்பட்ட ஸ்டீபனி என்ற பெண் ஒருவர் மூன்று வருடங்களுக்கு பின் மூடி வைத்திருக்கும் தன் முகத்தை காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஒயிட் ஐலேண்ட் எரிமலை வெடித்துசிதறியது.அன்று எரிமலையை ஆய்வு செய்துகொண்டு இருந்த 47 சுற்றுலாப் பயணிகளில் இவரும் ஒருவர்.விபத்தில் ஸ்டீபனி மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று வருடங்களுக்கு பின் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ள அவர், தன் வாழ்வில் நிகழ்ந்த மோசமான தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக முகமூடியை கொண்டு மூடி வைத்திருக்கும் தன் முகத்தை,முகமூடியை திறந்து காட்டியுள்ளார் மேலும் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமூடி அல்லாது முகத்தை பதிவிட்டு, உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.