அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிறையில் அடைத்தது போல, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான 3டி கலைப்படைப்பு, உலக அளவில் தற்போது மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே, அமெரிக்காவுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஈரானிய வீதிகளில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த முறை ஈரான் அதிகாரிகள் ஒரு படி மேலே சென்று, அமெரிக்க அதிபரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தி ஒரு நூதனமான மற்றும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
தெஹ்ரானின் வடக்கே உள்ள தாஜ்ரிஷ் (Tajrish)சதுக்கத்தில், பல மாடிகள் உயரத்திற்கு தத்ரூபமான ஒரு 3டி சிறைக்கூண்டு அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.
அந்த சிறைக்குள், அடர்ந்த கோட் சூட் மற்றும் சிகப்பு நிற டை அணிந்து, அச்சு அசலாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போலவே ஒரு நடிகர் சிறைக் கம்பிகளை பிடித்தவாறு மிகத் தத்ரூபமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பிரம்மாண்டமான கூண்டிற்கு கீழே ஏராளமான ஈரான் மக்கள் திரண்டு, ட்ரம்பிற்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்புவதோடு, அவருடன் பல சுவாரஸ்யமான செல்ஃபிக்களையும் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஒருபுறம், “கவலைப்படாதே ட்ரம்ப், நாங்களே உனக்கு பெயில் வாங்கித் தருகிறோம்” என சிலர் அவரை கிண்டல் செய்தாலும், மறுபுறம் சில இளைஞர்கள் “ட்ரம்ப், இந்த முறை நாங்கள் உன்னை கட்டாயம் கொல்வோம்” என மிக ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடங்கியதில் இருந்தே, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் என அப்பாவிப் பொதுமக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு மிகப்பெரிய போர் குற்றவாளி என ஈரான் மிகக் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த ரகசிய மற்றும் ஆக்ரோஷமான 3டி பிரச்சாரம், இரவு பகலாக வாரத்தின் ஏழு நாட்களும் தொடர்ந்து செயல்படும் வகையில் ஈரான் அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் மாபெரும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
