சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…

சென்னைக்கு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மற்றும் நாளை வருகை தர உள்ளார். இதையொட்டி, சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வழித்தடங்களில் பூஜ்ஜிய போக்குவரத்து (Zero Traffic) நடைமுறையும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பிலும், பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் விமான நிலைய சந்திப்பிலும் திருப்பி விடப்படும். போரூரில் இருந்து வருபவர்கள் கத்திப்பாரா வழியாகவும், அசோக் பில்லரில் இருந்து வருபவர்கள் சிபெட் சந்திப்பு வழியாகவும் மாற்றுப் பாதையில் செல்லலாம்.

அண்ணா சாலை, அடையாறு, ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். பகுதிகளிலும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படும்.

மேலும், 22.11.2026 அன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அடையாறில் இருந்து பாரிஸ் கார்னர் செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை வழியாகவும், பாரிஸ் கார்னரில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணா சாலை வழியாகவும் செல்லலாம்.

எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

Latest News