ஊழியர்களுக்கு தங்கப் பரிசு கொடுத்த காவ்யா மாறன்… வைரலாகும் வீடியோ!!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 21) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், திருமணக் கொண்டாட்டத்திற்கு முன்பாக சன் குரூப் ஊழியர்களுக்கு காவ்யா மாறன் வழங்கியுள்ள சிறப்புப் பரிசுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சன் குரூப் செயல் இயக்குநராகவும் இருக்கும் காவ்யா மாறன், தனது நிறுவன ஊழியர்களுக்கு திருமண அழைப்பிதழ்களுடன் தங்க நாணயங்கள், தங்க மோதிரங்கள் மற்றும் சாக்லேட்டுகளைப் பரிசாக வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தங்க நாணயங்களும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஊழியர்களுக்கு தங்க மோதிரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பரிசுப் பெட்டிகளை ஊழியர்கள் திறந்து பார்க்கும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. காவ்யா மாறனின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், நவம்பர் 25-ஆம் தேதி சன் குரூப் ஊழியர்களுக்காகத் தனிப்பட்ட மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அனிருத் மற்றும் காவ்யா மாறன் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சென்னையில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகம், கிரிக்கெட், தொழில்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு தங்கப் பரிசுகளை வழங்கி காவ்யா மாறன் காட்டிய அன்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Related News

Latest News