ஊசியை கண்ட பயத்தில் கதறி அழுத்த காவலர்

301
Advertisement

பொதுவாக குழந்தைகள் தான் ஊசி போடவேண்டும் என்றால் பயத்தில் அழுவார்கள்.ஊசி என்ற வார்த்தையை கேட்டாலே போதும்,விட்டால்  போதும் என ஓடி ஒளிந்துகொள்ளும் குழந்தைகளும் உண்டு.

இந்நிலையில்,பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கும் பொது ஊசியை கண்டு காவலர் ஒருவர் கதறி அழும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.இந்த வீடியோ உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் உள்ள காவலர் பயற்சி முகாமில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வீடியோவில்,பரிசோதனைக்காக ரத்தம் எடுக்க காவலர் ஒருவரின் முன் ஊசியை எடுத்துள்ளார் மருத்துவர்.ஊசியை கண்டதும் குழந்தையை விட மோசமாக பயத்தில் மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு அழுகிறார் அந்த காவலர்.

ஒரு கட்டத்தில்,அவரின் கையை இரு காவலர்கள் பிடித்துக்கொள்ள மருத்துவர் ஒரு வழியாக இரத்த மாதிரியை எடுத்துவிடுகிறார்.இதற்கிடையில் அவர் செய்த செயல் தான் அனைவரையும் சிரிக்கவைத்துள்ளது.

ஊசி குத்தும் பொது, குழந்தையை விட பயங்கரமாக கதறி கதறி  அழுகிறார்,அத்துடன் விதவிதமாக அழுகும் அவரின் அழுகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.