“இரு… போலீஸ் அங்கிள் தருவாரு” குட்டியுடன் காத்திருந்து குரங்கு 

311
Advertisement

உ.பி காவல்துறையால் பகிரப்பட்ட வீடியோ ஒன்று விலங்குகள் மீதான மனிதர்களின் அன்பை உணர்த்தும் விதம் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,மோஹித் என்ற கான்ஸ்டபிள் ஜீப்பில் அமர்ந்து மாம்பழத்தை அறுத்துக்கொண்டு இருக்கிறார்.அவரின் அருகே குரங்கு ஒன்று தன் குட்டியை தோள் மீது சுமந்தபடி காத்துகொண்டு உள்ளது.

சில வினாடிகள் கழித்து,அந்த காவலர் கையில் வைத்திருந்த மாம்பழத்தை அறுத்து ,ஒரு துண்டை குரங்கிடம் கொடுக்கிறார்.அவர் கொடுப்பார் என தெரிந்து தான் தன் குட்டியுடன் அமைதியாக உட்காந்து பழத்துண்டை வாங்கிக்கொள்கிறது அந்த சமத்து குரங்கு.

மேலும் அருகில் இருக்கும் மற்ற குரங்குகளுக்கும் அந்த பழத்தை கொடுக்கிறார் அந்த காவலர்.காவலரின் இந்த செயல் இணையவாசிகளின் இதயங்களை வென்றுவருகிறது.