உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கிராம வருவாய் துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்.அந்த புகார் மனுவை மூத்த அதிகாரி ஒருவர் அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார்
அந்த புகார் மனு ,அரசு முத்திரை மற்றும் அந்த அதிகாரியின் கையெழுத்துடன் நடவடிக்கை எடுக்க மேல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த புகார் மனுவை படித்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் அந்த மனுவில், “கடந்த பல மாதங்களாக மழை பெய்யவில்லை என்பதை மரியாதைக்குரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.வறட்சியால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை கால்நடைகள் மற்றும் விவசாயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இவ்விவகாரத்தில் மழைக் கடவுள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து கட்டாயப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது.
இந்த மனுவை படிக்காமலே மேலிடத்திற்கு அனுப்பிய சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த விவசாயி எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.