சாலை ஓரம் தள்ளுவண்டியில் துணிகள் விற்கும் ஒரு சாதாரண வியாபாரிக்கு துப்பாக்கி ஏந்திய இரு காவலர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளது உத்தரபிரதேச உயர் நீதிமன்றம்.இந்த காட்சியை காணும் மற்ற வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஆசிரியமடைந்தனர்.
முன்னதாக, இந்த வியாபாரின் பெயர் ராமேஷ்வர் தயாள், இவர் அம்மாநிலத்தின் முன்னனி அரசியல் கட்சி ஒன்றின் தலைவர்கள் மீது சாதி துஷ்பிரயோகம் செய்ததாகவும் மற்றும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது அம்மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இது பொய்யான குற்றச்சாட்டு எனவே,வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,கடந்த விசாரணையின் போது மனுதாரர் பாதுகாப்பின்றி நீதிமன்றம் வந்ததை கண்டு காவல்துறையிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி, ராமேஷ்வர் தயாளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.