சென்னை கோயம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நெற்குன்றம், செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்று சோதனை செய்தபோது அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் தங்கியிருந்த விஜய் மற்றும் சிவா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.