விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா உள்ளார்.இந்நிலையில், அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஒரே நேரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும் பொறுப்பு வகிப்பது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார் அதிமுக எம்.பி இன்பதுரை.இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அப்படி எந்த விதிமுறையும் இல்லை. அதிமுகவினருக்கு விளையாட்டும் தெரியாது, அரசியலும் தெரியாது.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை இன்று வெளியிட்டுள்ள பதிவில், விளையாட்டுத் துறை அமைச்சர், கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக நீடிப்பது நலன் முரண்பாடு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.மேலும் உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் மூன்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் முதல் பரிந்துரைகளில் ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்றும், இந்தப் பரிந்துரைகளில் பலவற்றை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது என கூறியுள்ளார் .
“விதிகள் ஏதும் இல்லை” என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இதனை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுரை கூறியுள்ளார்
