விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக

தமிழகத்தில் பாஜக தனது அடித்தளத்தை விரிவுபடுத்த முயன்று வரும் நிலையில், விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடித்திருப்பது டெல்லிக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. தவெகவின் கொள்கைகள் பாஜகவின் அரசியலுக்கு மாறுபட்டவை என்பதால், நேரடியாக எதிர்க்காமல் ‘ரிமோட் கண்ட்ரோல்’ முறையில் கட்டுப்படுத்தும் வியூகத்தை டெல்லி கையாள்வதாகத் தெரிகிறது.கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் தாமரை’ போன்ற நேரடி தந்திரங்களுக்கு பதிலாக, தமிழகத்தில் மறைமுக அழுத்தம் மற்றும் உளவு அரசியல் மூலம் கட்டுப்பாட்டைத் தக்கவைக்கும் ‘ஆபரேஷன் ரேடார்’ உத்தி வகுக்கப்பட்டுள்ளது.

விஜய் மட்டுமல்லாமல், தவெக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்து இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரின் பின்னணி விவரங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. அவர்கள் மீதான சொத்துக் குவிப்பு புகார்கள், நிலுவை வழக்குகள், வருமான வரி விவகாரங்கள் அடங்கிய ஒரு பெரிய ‘file’ டெல்லியில் தயாராகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் file களை பயன்படுத்தி ஆரம்பக்கட்டத்திலேயே அரசியல் அழுத்தம் கொடுத்து, தவெக அரசு தங்கள் விருப்பப்படி செயல்படாமல் தடுக்க முயற்சி எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய அரசியல்-சட்ட அழுத்தங்கள் தொடங்கியிருப்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசியல் களம் கடுமையான நிழல் யுத்தங்களுக்கு சாட்சியாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது

Related News

Latest News