திருச்சி கிழக்கில் கமல் ? திடீரென குரல் கொடுக்கும் மநீம

முதல்வர் விஜய் தனது ஒரு MLA பதவியை ராஜினாமா செய்துள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளூம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக சார்பில், இனிகோ இருதயராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், பொது வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை முன்னிறுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பேசி வரும் அவர்கள், தற்பொழுதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக உதயநிதி அவர்கள் சட்டமன்றத்தில் கர்ஜித்து வருகிறார். ஆனாலும் தமிழக சட்டமன்றத்தில் ஒரு அனுபவம் நிறைந்த ஒரு ஆளுமை தேவை.அந்த ஆளுமைமிக்கவர்கள் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அந்த இடம் சிறப்பாக பொருந்தும் என கூறி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமானோடு திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு நல்ல தோழமையுள்ளது. மேலும் கமல்ஹாசன் அவர்களுக்கு திருச்சியில் ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதோடு, கடந்த 2019 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை தன்னகத்தே கொண்டுள்ளது.

Related News

Latest News