டிரம்பிற்கு விழுந்த மரண அடி!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு? எப்ஸ்டீன் விவகாரத்தில் திருப்பம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.

பிரபல சர்வதேச ஊடக அதிபர்ரூபர்ட் முர்டோக் (Keith Rupert Murdoch) மற்றும் முன்னணி நாளிதழான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நிறுவனத்திற்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த, சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 85,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பிரம்மாண்ட அவதூறு வழக்கை நீதிமன்றம் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய சர்வதேச பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு, கடந்த 2003-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் மிக ஆபாசமான வரிகள் மற்றும் வரைபடங்களுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விரிவான புலனாய்வுச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தி தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டதாகக் கூறி டிரம்ப் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி டாரின் கெய்ல்ஸ், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் உள்நோக்கத்துடனோ அல்லது திட்டமிட்ட தீய எண்ணத்துடனோ இச்செய்தியை வெளியிடவில்லை என்று சுட்டிக்காட்டி வழக்கை நிராகரித்தார்.

மேலும், இவ்வழக்கை டிரம்ப் எதிர்காலத்தில் எந்தத் திருத்தங்களுடனும் மீண்டும் மறுதாக்கல் செய்ய முடியாது என்றும் நீதிபதி திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி உலகளவில் பெரும் புயலைக் கிளப்பியிருந்த சூழலில், அதில் டிரம்பின் மார்-அ-லாகோ தோட்டத்தில் நடைபெற்ற விருந்துகள் குறித்தும், அவர் தொடர்புடைய பல்வேறு முறைகேடு புகார்கள் குறித்தும் பல விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கடித சர்ச்சை பூதாகரமாக வெடித்ததும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்லாமல், டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியினரே கூட எப்ஸ்டீன் ஆவணங்களை முழுமையாக பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே குரல் கொடுக்கத் தொடங்கினர்.

தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளைப் போலியானது என்று கூறி டிரம்ப் மழுப்ப முயன்றாலும், நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு அவருக்கு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம், அமெரிக்க அரசியலில் அடுத்தகட்டமாக என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News