முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடம் இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவைகளை மனிதநேயம் என்று கூறலாம்.
மனிதநேயத்தை நிரூபிக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருகிறது.தற்போது, ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், போக்குவரத்து காவலர் ஒருவர்,வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக சாலைகளில் இருக்கு சிறு கற்களை அகற்றுகிறார்.போக்குவரத்து காவல்பணி என்பதே கடுமையான பணிகளில் ஒன்று.மழை,கடுமையான வெளியில் என எந்த சூழ்நிலையிலும் போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும்.
இங்கும் அப்படி தான், போக்குவரத்து காவலரின் மனிதநேயத்தை உணர்த்துகிறது இந்த வீடியோ.இதில் , சாலையில் சிறுசிறு கற்கள் சிதறியுள்ளது.இதனால் வாகனங்களின் டயர் பஞ்சர் ஆக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதால்.சிகப்பு சிக்னல் வரும் பொது எல்லாம் அந்த கற்களை தானே துடைப்பத்தால் கூட்டி ஓரம்கட்டுகிறார் இந்த காவலர்.
தனக்கென்ன என நினைக்காமல், எவரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி மற்றவர்களுக்காக சாலையை சுத்தம் செய்த இவரின் செயல் பலரையும் ஈர்த்து வருகிறது.