Friday, December 13, 2024

உலகின் மிக நீளமான மின்னல்

அமெரிக்காவில் 768 கிலோ மீட்டர் அளவுக்கு மின்னல் தோன்றியது, உலகின் மிக நீளமான மின்னல் என்ற அரிய சாதனையாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி டெக்சாஸ், லூசியானா, மிசிசிபி மாகாணங்களில் 477.2 மைல் நீளத்துக்கு மின்னல் தோன்றியது. இது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனுக்கும் ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகருக்கும் இடைப்பட்ட தொலைவுக்கும் சமமாகும்.

இதுவே உலகின் மிக நீளமான மின்னல் என்று உலக வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியபோது,

பருவ நிலை மாற்றத்துடன் தொடர்பில்லாத இந்தப் பதிவுகள் புதிய செயற்கைக்கோள் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தின்மூலம் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, மின்னல் 10 மைல்களுக்குமேல் நீடிக்காது. ஒரு விநாடிக்கும் குறைவாகவே நீடிக்கும். ஆனால், 17.1 விநாடிகள் நீடித்திருந்தது ஆச்சரியமே என்றார்.

2018 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் 440.6 மைல் நீளத்துக்குத் தோன்றியதே உலகில் மிக நீளமான மின்னல் என்ற சாதனையைப் பெற்றிருந்தது. அதைவிட 60 கிலோ மீட்டர் நீளம் அதிகமாக அமெரிக்காவில் தோன்றிய மின்னல் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.

Latest news
Related news