தூக்கியெறிந்த காளை;
காப்பாற்றிய தந்தை

267
Advertisement

தூக்கியெறிந்த காளையிடமிருந்து மகனைக் காப்பாற்றிய
தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிகழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதுபோல, அமெரிக்காவில்
ரோடியோ என்னும் போட்டி நடந்துவருகிறது. கட்டுக்கடங்காத
காளையின்மீது சவாரி செய்து வெற்றிபெறுவதே இந்தப் போட்டி.

டெக்சாஸ் மாகாணத்தில் இந்த ரோடியோ போட்டி நடந்தது. இதில்
18 வயது இளைஞன் ஒருவனும் கலந்துகொண்டான்.

போட்டி தொடங்கியதும் மைதானத்துக்குள் காளை வருவதற்காக
கேட் திறக்கப்பட்டது. உடனடியாக அதன்மீது சவாரி செய்யமுயன்ற
அந்த இளைஞனைத் துள்ளித் துள்ளிக் குதித்து கீழே தள்ளிவிட்டது
அந்தக் காளை.

என்றாலும், சக வீரர்கள் காளையின் கவனத்தைத் திசைதிருப்ப
முயற்சி செய்துகொண்டிருக்கும்போதே கீழே விழுந்த இளைஞனை
நோக்கி வரத் தொடங்கியது.

அந்த சமயத்தில் இளைஞனின் தந்தை ஓடிவந்து, கீழேவிழுந்து
கிடக்கும் தனது மகன்மீது விழுந்து, காப்பாற்ற முயன்றார். அப்போது,
இளைஞனை நெருங்கிவந்த காளை, மீண்டும் கொம்புகளால் தந்தை
மகன் இருவரையும் முட்டித் தள்ளியது. இருப்பினும் இருவரும்
பெரிய காயமின்றித் தப்பிவிட்டனர்.

சீறிவரும் காளையின் ஆவேசத் தாக்குதலில் இருந்து தனது
மகனைக் காப்பாற்றிய அந்தத் தந்தை ஹீரோவாக
அமெரிக்காவில் புகழப்பட்டு வருகிறார்.