Sunday, June 22, 2025

”நான் வந்துட்டேன்னு சொல்லு” Youtube சேனல் தொடங்கிய AK

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், கடந்த 2024ம் ஆண்டு முதல், சர்வதேச கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகிறார்.

இதற்காக அஜித்குமார் ரேஸிங் அணி என்ற பெயரில் அணி, ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளார். இந்தநிலையில் அடுத்தகட்டமாக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில், Youtube சேனலை அஜித் தொடங்கி இருக்கிறார்.

இதில் அஜித் கலந்து கொள்ளும் கார் பந்தயங்களின் வீடியோக்கள் Streaming செய்யப்படும். அத்துடன் கார் பந்தய அனுபவங்கள் குறித்த, தன்னுடைய அனுபவங்களையும் இதில் அஜித் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக அஜித்குமாரின் இரண்டு கார் பந்தய வீடியோக்கள், இந்த சேனலில் Streaming செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவரது சேனலை ஏராளமானோர் Subscribe செய்து வருகின்றனர். அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news