தமிழ்வழிக் கல்வி!

476
Advertisement

உலகில் 40 சதவிகித மக்கள் தாய் மொழியில் கற்கும்
வாய்ப்பை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

நோபல் பரிசுபெற்றவர்களுள் 60 சதவிகிதத்தினர்
தங்கள் தாய்மொழியிலேயே பயின்று கண்டுபிடிப்பு
களையும் இலக்கியங்களையும் படைத்துள்ளனர்.

இந்நிலையில், AICTE எனப்படும் அகில இந்தியத்
தொழில்நுட்பக் கழகம் இளநிலைப் பொறியியல்
அதாவது, பிஇ பட்டப்படிப்பை எட்டு இந்திய மொழிகளில்
கற்பிக்க அனுமதியளித்துள்ளது.

தாய் மொழியில் பாடங்களைப் போதிக்க பொறியியல்
கல்லூரிகள் அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திடம்
விண்ணப்பித்து அனுமதியைப் பெறவேண்டும்.

தமிழ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, மராத்தி, மலையாளம்,
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இனி பி.இ பாடங்
களைப் பொறியியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கலாம்.
இதற்காக இந்த எட்டு மொழிகளிலும் பி.இ பாடங்கள் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளன.

2020- 2022 ஆம் ஆண்டுமுதல் பொறியியல் கல்வியை
அவரவர் விரும்பும் மொழியில் பயிலலாம். தாய் மொழியில்
தான் பயில வேண்டுமெனக் கட்டாயப் படுத்தப்படுவதில்லை.

ஐரோப்பா நாடுகள் (நார்வே, பின்லாந்து, டென்மார்க், சுவீடன்,
ஐஸ்லாந்து) முழுவதும் ஆங்கிலத்தில்தான் கல்வி போதிக்
கிறார்கள். சீனாவில் சீன மொழியில் போதிக்கிறார்கள்.
இரண்டாவது மொழியாக மாண்டரின் மொழி கற்றுத்
தரப்படுகிறது.

தைவான், ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, தென்
அமெரிக்க நாடுகள், ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளில் அந்நாட்டின்
தாய் மொழிதான் போதனை மொழியாக உள்ளது.

புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ”குழந்தைகள்
மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல், ஒரு மிதிவண்டியை
ஓட்டிப் பழகுவதுபோலத் தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்”
என்கிறார்.

குஜராத் கல்வி மாநாடு ஒன்றில் பேசிய மகாத்மா காந்தி,
”கல்வி மொழி தாய் மொழியாக இருக்க வேண்டும்.. தாய்
மொழி தனக்குரிய இடத்தைப் பெற்றுவிட்டால் நமது மூளைக்கும்
இன்னும் தேவையான அறிவைப் பெறுவதற்கு வசதியாக
விடுதலை கிடைக்கும்”என்றார்.

ஆப்ரிக்க நாடுகளுள் பல தங்கள் தாய் மொழியில்
போதிக்கும் முறையைத் தற்போது நடைமுறைப்
படுத்தியுள்ளன. அதேசமயம், உலகளவில் பேசப்படும்
மொழிகளையும் கற்றுத் தருகின்றன.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு தாய் மொழியில்
கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது,
இனி, இந்தியர்களின் சாதனை உலகளவில் அதிகரிக்கும் என
நம்பலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவிட்சர்லாந்து,
கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார்
நிறுவனங்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் முக்கியப்
பொறுப்பில் திறம்பட செயல்புரிந்து வருகின்றனர். தற்போது தாய்
மொழியில் உயர்கல்வி கற்பதன்மூலம் இந்தியாவையே உலகின்
முன்னணி நாடாக உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.