முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு… வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்

தமிழ்நாட்டில் சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் மக்களுக்கும், கட்டுமானத் துறையினருக்கும் விஜய் தலைமையிலான அரசு ஒரு மிகப்பெரிய குட்நியூஸை கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான திட்ட மற்றும் கட்டிட அனுமதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ‘ஒரு’ குறிப்பிட்ட கால வரையறைக்குள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து புதிய விதிமுறைகளின்படி, பொதுமக்கள் சமர்ப்பிக்கும் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து ‘முதலில் வருவோருக்கு முதலில்’ (First Come, First Served) என்ற முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

விண்ணப்பம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் (5 Working Days) சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று தங்களின் கல ஆய்வை எவ்வித காலதாமதமும் இன்றி கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பங்களை மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கும் அதிகாரிகளின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கட்டிட அனுமதியின் ஒட்டுமொத்த செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், விண்ணப்பித்த 24 நாட்களுக்குள் அனைத்து விதமான திட்ட மற்றும் கட்டிட அனுமதிகளும் முழுமையாக ஆன்லைன் (Online Approval) மூலமாகவே வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு காலக்கெடு விதித்துள்ளது.

இதில் மிக முக்கியமாக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து எவ்விதமான அச்சிடப்பட்ட காகித ஆவணங்களையோ (Printed Documents) அல்லது கூடுதல் நகல்களையோ அதிகாரிகள் நேரில் கோறக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கணினிமயமாக்கப்பட்ட நடைமுறையானது, தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் வாழும் எளிய நடுத்தர மக்கள் இடைத்தரகர்களின் இன்றி தங்களின் மொபைல் அல்லது கணினி மூலமாகவே அப்ரூவல்களைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது.

இந்த புதிய டிஜிட்டல் நடைமுறையில் லஞ்ச ஊழலைத் தடுக்கும் விதமாக, விதிகளை மீறி பொதுமக்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் யாரேனும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் அல்லது பொறியாளர்களை அலுவலகங்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டால், அவர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

Related News

Latest News