மொபைலில் பணம் அனுப்புகிறீர்களா? உங்கள் செலவைக் கட்டுப்படுத்த இந்த ஒரு ஆப்ஷன் போதும்

Google Pay, PhonePe,Paytm போன்ற UPI செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்ப முடியும். அதேபோல் இந்த செயலிகளில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதுவும் யுபிஐ செயலிகளில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.குறிப்பாக இந்த யுபிஐ செயலிகளில் UPI சர்க்கிள் அல்லது பாக்கெட் மணி எனும் வசதி இருக்கும். இது மிகவும் பாதுகாப்பான ஒரு தொழில்நுட்பமாகும். UPI சர்க்கிள் அல்லது பாக்கெட் மணி அம்சம் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு Digital Payment செய்ய உதவக் கொண்டு வரப்பட்ட சேவை ஆகும்.

இந்த UPI செயலிகளில் உள்ள பாக்கெட் மணி வசதி மூலம் ஒருவருக்கு மாதத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று செட் செய்துவிட்டால், அவர்கள் அந்த அளவிற்குச் செலவு செய்துகொள்ளலாம்.அதாவது உங்கள் மகள் அல்லது மகனுக்கோ ரூ.3000 பாக்கெட் மணியாக செட் செய்துவிட்டால், அவர்கள் இந்த ஆப்ஷனில் செலவு செய்யும் ரூ.3000 உங்கள் வங்கி கணக்கில் இருந்து செல்லும். அதேசமயம் இந்த பாக்கெட் மணி வசதியில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அல்லது செலுத்தும் வரம்பு விருப்பத்தைத் தேர்வு செய்ய முடியும்.

இந்த UPI சர்க்கிள் அல்லது பாக்கெட் அம்சத்தை இயக்குவதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் அதை மிக எளிதாகச் செயல்படுத்தலாம்.

1.முதலில் உங்களது போனில் Google Pay, PhonePe அல்லது உங்கள் முதன்மை UPI செயலியைத் திறக்க வேண்டும்.

2.அடுத்து செயலிக்குள் UPI சர்க்கிள் அல்லது பாக்கெட் மணி விருப்பத்தைத் தேட வேண்டும்.

3.அதன்பின்பு உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு UPI சர்க்கிள் அல்லது பாக்கெட் மணி விருப்பதை செட் செய்ய Invite Dependent அல்லது Add Member என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

4.அதன்பிறகு நீங்கள் தேர்வு செய்த குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் மொபைலில் உள்ள UPI ஐடி அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

5.குறிப்பாக இதில் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய, உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் அங்கீகரிக்கவோ அல்லது மீண்டும் சரிபார்க்கவோ வேண்டியிருக்கலாம்.

6.இறுதியாக உங்களது வசதிக்குத் தகுந்தபடி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அல்லது செலுத்தும் வரம்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்த செயல்முறை முடிந்ததும் மற்ற தொலைபேசி உங்கள் UPI வட்டத்துடன் இணைக்கப்படும். இதன் பிறகு நீங்கள் எந்த சிரமமும் இல்லாமல் இரண்டு சாதனங்களிலிருந்தும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News