பிரதமர் மோடியை பாராட்டிய சசிதரூர்

396
Advertisement

அபார சக்தி பெற்றவர் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது ,கருத்துக் கணிப்புகள் வரும் வரை உ.பி.யில் கடும் போட்டி நிலவுவதாக பலராலும் கணிக்கப்பட்டது . சமாஜ்வாதி முன்னிலை வகிப்பதாகவும் செய்திகள் வந்தன. இவ்வளவு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வரும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.

பிரதமர் மோடி அபார சக்தியும் சுறுசுறுப்பும் கொண்டவர். மிகவும் கவனம் ஈர்க்கும் சில காரியங்களை, குறிப்பாக அரசியல் விஷயங்களை அவர் செய்துள்ளார். இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.