ஏழு வயது சிறுவன் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,அதில், சிறுவனுக்கு ஏழு வயது என்றும், ஆனால் உணவு விநியோக நிறுவனத்தில் படி சிறுவனின் வயது 14 என கூறியுள்ளது மேலும் இது குறித்த அந்த சிறுவனிடம் கேட்கும் போது.
ஒரு கையில் சாக்லேட் கவரை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் போன்னை வைத்துக்கொண்டு, தன் தந்தை விபத்தில் உயிரிழந்துவிட்டார் ,எனவே குடும்பசூழ்நிலையை மனதில் வைத்து பள்ளி முடிந்ததும் உணவை டெலிவரி செய்ய மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வீடு வீடாக சைக்கிள்லில் செல்வேன் என கூறுகிறான் அந்த சிறுவன்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து பல பயனாளர்களுக்கு சிறுவனுக்கு உதவ முன் வந்தநிலையில் ,இதை கவனத்திற்கு கொண்டுவந்த வாடிகையாளருக்குநன்றி தெரிவித்து,சிறுவனின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு உதவ முன்வந்துள்ளது அந்த சம்மந்தப்பட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவனம்.