அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். குறிப்பாக, வெளிநாட்டு குடியிருப்பாளர்களை கட்டாயமாக நாடு விட்டு வெளியேற்றும் நடவடிக்கை, அரசு ஊழியர்களின் பணிநீக்கம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவது போன்ற முடிவுகள், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கருதி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியான நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக சாலைமுழுவதும் பேரணியில் ஈடுபட்டனர். இந்த நிலைமையை சமாளிக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.