கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சிறையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.சிறையில் இருந்த ஒரு கொலைக் குற்றவாளி சிறையிலிருத்து தப்பிக்கிய பல நாட்களாக திட்டமிட்டுள்ளான்.குற்றவாளியான கோட்டயத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் சம்பவத்தன்று மாலையில் சிறைச் சுவரில் ஏறி அருகில் உள்ள அரசு வளாகத்தில் இருக்கும் மரத்தில் ஏறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தகவல் சிறை காவலர்களுக்கு தெரியவந்தது.
உடனடியாக குற்றவாளி ஏறிய மரத்தை சுற்றிவளைத்தனர் காவல்துறை.குற்றவாளியை கீழே இறங்கிவர சொல்லியும்,இறங்க மறுத்துவிட்டான் அந்த குற்றவாளி.அதையடுத்து, தீ அணைப்பு காவல்துறையை சேர்ந்த மூவர் மரத்தின் மீது ஏறத்தொடங்கினர்.
இதை கவனித்துக்கொண்டு இருந்த குற்றவாளி,ஒரு கட்டத்தில் மரத்தின் உள்ள மற்றொரு கிளையை தாவி பிடிக்க முயற்சித்து உள்ளான்.மற்றொரு புறம் காவல்துறை மரத்தின் கீழ் வலையை விரித்து குற்றவாளியை பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
மற்றொரு கிளையை பிடிக்க முயன்ற அந்த குற்றவாளி நிலைதடுமாறி , மரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்துவிடுகிறான்.ஏற்கனவே காவல்துறை வலையை விரித்து காத்திருந்த நிலையில், தானாக வந்து மாட்டிக்கொண்டான் அந்த குற்றவாளி.வலையில் வந்து மீனை போல மாட்டிக்கொண்ட குற்றவாளியை பத்திரமாக மீண்டும் சிறைக்கு அழைத்துச்சென்றனர் காவல்துறையினர்.