தமிழம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்

391
Advertisement

கோடை காலத்தில் மின் வெட்டு என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது.ஆனால் தற்போது பல மாநிலங்களில் மின் வெட்டு மக்களை வாட்டிவதைத்து வருகிறது.

முன்னதாக, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு ஏற்படலாம் என்ற தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.ஆனால் இப்போது நாடு முழுவதும் மொத்தம் உள்ள 178 அனல் மின் நிலையங்களில்  100 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும். அதில் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சட்டீஸ்கர்,  கர்நாடகா, ஆந்திரா, அரியானா, பீகார், ஜார்க்கண்ட், தமிழகம் ஆகிய 12 மாநிலங்கள் அடங்கும்.