தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை

247

முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் ஆணையம்  பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் வாக்கை உடனே செலுத்தி தபாலில் அனுப்பாமல், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரத்தில் போய்ச்சேரும்படி தபாலில் அனுப்புகிறார்கள். இது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.

எனவே தபால் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறையை மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடுகிற அரசு ஊழியர்கள் நீண்ட காலம் வாக்குச்சீட்டை தங்கள் வசம் வைத்திருந்து, அதனால் ஓட்டுக்கு பணம் வாங்குதல், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகுதல், வேட்பாளர்களின் செல்வாக்குக்கு பயந்து செயல்படுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது