சரிந்து விழுந்த குடியிருப்புகள் அச்சத்தில் மக்கள்

61

மகாராஷ்டிராவில் 7 குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த, வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் vile parle பகுதியில் உள்ள 7 குடியிருப்புகள், எதிர்பாராதவிதமாக, அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குடியிருப்புவாசிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று அருகில் இருந்த, 24 கட்டிடங்களில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற்றி, பள்ளியில் தங்க வைத்தனர். மேலும் குடியிருப்புகள் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

Advertisement