ஒரு  தேநீர்    ரூ. 70  அதிர்ச்சியில் இரயில் பயணிகள்

237
Advertisement

கடந்த ஜூன் 28ம் தேதி டெல்லிக்கும் போபாலுக்கும் இடையே ஓடும் போபால் சதாப்தி ரயிலில் பயணித்த பயணி, ஒரு கப் தேநீர் ஆர்டர் செய்துள்ளார்,தேநீருடன் அவருக்கு வழங்கிய பில்லை கண்டது அதிர்ச்சி அடைந்தார் அந்த நபர்.

அதில், ஒரு கப் தேநீரின் விலை ரூ.20  என்றும் மற்றும்  அதற்கான  சேவைக் கட்டணமாக ரூ.50 சேர்க்கப்படுகிறது.இதை கண்டு அதிருப்தி அடைந்த அந்த பயணி,சமூக வலைத்தளத்தில் பில்லுடன்  “ரூ. 20 மதிப்புள்ள தேநீருக்கு  ஜிஎஸ்டி ரூ 50. மொத்தத்தில் ஒரு டீ ரூ. 70. இது ஒரு அற்புதமான கொள்ளையல்லவா?” என பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்து  இந்தியன் இரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில் , பயணியிடம் கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.இந்திய ரயில்வேயின் 2018 சுற்றறிக்கையின்படி, ராஜ்தானி, சதாப்தி அல்லது துரந்தோ ரயில்களில் முன்பதிவு செய்யும் போது பயணிகள் உணவை முன்பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் உணவை ஆர்டர் செய்வதற்கு 50 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

முன்னதாக, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில் உணவு சேவைகள் கட்டாயமாக்கப்பட்டன. அவை பின்னர், விருப்பமாக மாற்றப்பட்டன – மேலும் பயணத்தின் போது உணவை விரும்பாத பயணிகள் டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.