Friday, June 13, 2025

“பேரழிவு அணு ஆயுதங்கள்” சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் போடும் பயங்கர பிளான்! அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

பாகிஸ்தான் இப்படி தலைதெறிக்க ஆடுகிறது என்றால் யார் கொடுத்த தைரியம் இது? இந்த அசட்டு துணிச்சல் எங்கிருந்து வந்தது?  பாகிஸ்தான் தனது ஆயுதங்களை நவீனமயமாக்க யாருடைய கையை சார்ந்து இருக்கிறது? அவர்களின் அடுத்த திட்டம் தற்போது என்னவாக இருக்கிறது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருப்பது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களைச் சீனாவின் உதவியுடன் நவீனமயமாக்கி வருவதாகவும் பாகிஸ்தான் இன்னமும் இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே தொடர்ந்து பார்ப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையை பகிரும் நாடுகளுடனான மோதல்களே பாகிஸ்தான் ராணுவத்திற்கு அடுத்த சில ஆண்டுகள் பெரிய தலைவலியாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வதோடு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை அதன் அண்டை நாடுகளிடம் இருந்து தொடர்ந்து வாங்கி குவித்து வருவது ஏறக்குறைய உறுதியாகியிருப்பதோடு குறிப்பாகப் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்கும் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தைச் சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற்று வருகிறது என்றும் அதில் சில ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி மற்றும் ஐக்கிய அமீரகம் வழியாகவும் பாகிஸ்தானுக்குச் செல்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த தகவலில் இந்தியா இப்போது ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஆயுதங்களைக் குறைத்திருந்தாலும், இந்தியா-ரஷ்யா இடையேயான நல்லுறவு தொடரவே செய்யும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news