Thursday, March 20, 2025

பாகிஸ்தானில் 400 பேருடன் சென்ற பயணிகள் ரயில் கடத்தல்

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகரில் இருந்து பலோசிஸ்தானில் உள்ள குவெட்டா நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளதாகவும் 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தங்களுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கினால் பிணைக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என பலோசிஸ்தான் விடுதலை ஆர்மி (BLA) என்ற அந்த கிளர்ச்சி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest news