Friday, June 13, 2025

அடிமடியிலேயே ‘கைவைத்த’ NPCI ஜூன் முதல் UPIல் இது ‘கட்டாயம்’

இந்தியாவில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் கட்டண தளமாக UPI இருக்கிறது. குறிப்பாக Google Pay, Phone Pe, PayTM ஆகியவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அண்மை காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுப்பதற்கு National Payments Corporation of India எனப்படும் NPCI, அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக பண பரிவர்த்தனை நேரத்தை குறைத்தல், செயலிழந்த மொபைல் எண்களை நீக்குதல், ஆகிய நடவடிக்கைளை NPCI அமல்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் வருகின்ற ஜூன் 30 முதல் புதிய விதி ஒன்றை NPCI அறிமுகம் செய்யவுள்ளது. இதுநாள்வரை நீங்கள் மொபைலில் ஒருவரின் பெயரை எப்படி சேமித்து வைத்து இருக்கிறீர்களோ, அதேபோல தான் UPIயிலும் அவரின் பெயர் உங்களுக்கு காட்டப்படும்.

ஆனால் இந்த புதிய விதியால் ஒருவரின் பெயர் வங்கிக்கணக்கில் எப்படி உள்ளதோ, அதேபோல தான், உங்களுக்கு UPI Appல் காட்டப்படும். Nick Names எனப்படும் செல்லப் பெயர்கள், அல்லது பாதியாக Contact லிஸ்டில் சேமிக்கப்படும் பெயர்கள் UPI தளங்களில் காட்டப்படாது.

மோசடியாளர்கள் தங்களது அடையாளத்தை மறைக்க புனைப்பெயர்களை இதுநாள்வரை பயன்படுத்தி வந்தனர். தற்போது அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக NPCI இந்த விதியை அமல்படுத்தவுள்ளது. இதனால் UPI தளத்தில் பணமோசடிகள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news