திருமணத்திற்கு  புதிய கட்டுப்பாடுகள்

206
Advertisement

ராஜஸ்தானில் உள்ள ஒரு சமூகம் மிகவும் கடுமையான மற்றும் வினோதமான திருமண விதிகளை விதித்துள்ளது.அனைத்து சமூகத்திலும் அதற்கென தனித்தனி கட்டுப்பாடுகள், நடைமுறைகள் இருக்கும்.

இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலத்தில் குமாவத் சமூகம் திருமணத்தில் கைப்பிடிக்க வேண்டிய சில தீர்மானத்தை நிறைவேற்றுள்ளனர்.அதில், ஃபேஷன் என்று மணமகன் தாடி வைக்க அனுமதிக்கப்படாது.திருமணம் என்பது ஒரு சடங்கு, இதில் மணமகனை  ராஜாவாகப் பார்க்க வேண்டும்.

பாலி மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்களில் தாடி வைத்த மணமகன்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, சுத்தமான ஷேவ் கொண்ட இளைஞர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கான செலவுகளைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் கேளிக்கை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது. ஹல்டி விழாவின் போது மஞ்சள் கூட அனுமதிக்கப்படாது.விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மணமகள் அணிகலன்களில் கட்டுப்பாடுகள், உணவு எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.”ஆடம்பரம் ” சமூகத்தின் நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களின் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளன, எனவே அவற்றை எளிமையாகவும் எங்கள் சடங்குகளின்படியும் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று  கூறியுள்ளனர்.இந்த விதிகள் தங்கள்  சமூகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.