இசைக்கு தெறித்து ஓடிய கரடி-ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

479
Advertisement

தண்ணீர் தேடி சில காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கமான ஒன்று என்றாலும் ஆபத்தானது.சமீபித்தில் பள்ளியில் நுழைந்த கரடி ஒன்றை தன் திறமையால் ஓடவைத்துள்ளார் அப்பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கனடாவின் ஷாவ்னிகன் ஏரியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் அகாடமியில் சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராதவிதம் கரடி ஒன்று, பள்ளியின் உள்ள குப்பைத்தொட்டி மீது மெதுவாக நடந்துவந்துகொண்டு இருந்தது.உள்ளே வருவது அறிந்த ஆசிரியர் ஒருவர் அந்த கரடியை விரட்ட முயற்சித்துள்ளார்.ஆனால் அது பின்வாங்கவில்லை.

இந்நிலையில்,இந்த அகாடமியில் இசை ஆசிரியராக இருப்பவர் திறமையாக யோசித்தார். தான் வைத்திருக்கும் “டராம்போன்” எனப்படும் இசை கருவியை இசைத்துள்ளார்.இவர் இசைக்கும் இசையை ,அந்த கரடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சில நிமிடங்கள் தொடர்ந்து முன்னேறி வந்த கரடி ,ஒருகட்டத்தில் திரும்பி பார்க்காமல் தெறித்து ஓடியது.இதை அருகே மாணவர் ஒருவர் படம் பிடித்துக் கொண்டுள்ளார்.ஆசிரியரின் இந்த துரிதச்செயலை அனைவரும் பாராட்டினர்.