குரங்குகள் எப்போதும் துறுதுறுவென இருக்கும் விலங்கு.அதை நாம் சீண்டாதவரை நமக்கு நல்லது.ஆனால் இங்கு ஒரு ரிக்ஷா ஓட்டுநர் குரங்கு ஒன்றை சீண்டுகிறார்.
தன்னை சீண்டியவரை அந்த குரங்கு ஆக்ரோஷமாக தாக்குகிறது.அந்த நபர் குரக்கிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.ஆனால் குரங்கு சமாதானம் ஆவதாக தெரியவில்லை , தொடர்ந்து அவரை தாக்கி.. ஓடவிடுகிறது.கடைசியில் அவர் குரங்கிடம் குனிந்து கைகூப்பு “என்னை விட்டுடுடா… ” என்பது போல மன்னிப்பு கேட்கிறார்
இதை பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்கள் பின் அந்த குரங்கிற்கு வாழைப்பழத்தை கொடுத்து சமாதனம் செய்துவைத்துள்ளனர்.