பிரதமர் மோடி, தனது மூன்று பணக்கார நண்பர்களுக்கு உதவுவதற்காக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 6வது ஆண்டு நினைவு நாளான நேற்று, பிலோலி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.
2016 ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக தெக்லூரில் பேசிய ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும் என்று திட்டவட்மாக தெரிவித்தார்.