புனேயில் வருகிறது மருத்துவ நகரம்- மகாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

356
Advertisement

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான மஹாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் புனேவில் எல்லா வகையான நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை பெறும் வகையில் MEDICITY என்ற மருத்துவ நகரம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில், ” மாநில அரசு புனே நகரம் அருகில் 300 ஏக்கர் பரப்பில் அதிநவீன வசதிகளுடன் ‘இந்திராயானி மெடிசிட்டி’ சென்டர் அமைக்க உள்ளது. இதில் ஆஸ்பத்திரி, மருத்துவ ஆராய்ச்சி மையம், உடல்நல மற்றும் பிசியோதெரபி மையங்கள் இடம்பெறும். ஒரே இடத்தில் அனைத்து வகையான சிகிச்சைகளும் பெறக்கூடிய நாட்டின் முதல் மருத்துவ காலனியாக இது இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.
இப்படியான மருத்துவ மையங்கள் நாட்டின் சில பகுதிகளில் தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன.