இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த பிப்.19 அன்று அவரது பிணைக் குறித்த விசாரணைக்காக கொழும்பு நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அப்போது வழக்கறிஞர் வேடமிட்டு அங்கு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய கொலையாளியை தேடி வந்த போலீஸார் அவர் அந்நாட்டை விட்டு கடல் வழியாக தப்பிக்க முயன்றபோது கைது செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொலைக்கு அவர்களுக்கு உதவியதாக ஒரு காவலர் மற்றும் ஒரு வேன் ஓட்டுநர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.