மனதை மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் தருணம், சோகத்தில் ஆழ்த்தும் தருணம் என நாள்தோறும் பல வீடியோக்கள் இணையத்தில் உலாவருகிறது.
தற்போது, உணர்ச்சிவசப்பட வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவில் , மெட்ரோ இரயில் நடைபாதையில் சில இந்திய ராணுவ வீரர்கள் நிற்கின்றனர்.
அப்போது,பின்னே இருந்து சிறுமி ஒருவர் ஓடிப்போய் இராணுவ வீரர் ஒருவரின் காலை தொட்டு வணங்குகிறார்.உடனே அந்த குழந்தையை தூக்கி தன் ஆசிர்வாதத்தை வழங்குகிறார் அந்த வீரர்.
சிறுமியின் இந்த செயல் அங்கிருந்த மற்ற இராணுவ வீரர்களையும் உணர்ச்சிவசப்படவைக்கும் விதம் உள்ளது .இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களின் இதயங்களையும் வென்றார் அந்த சிறுமி.