பூனைபோல கட்டிடத்திற்குள் நுழைந்த சிறுத்தை

253
Advertisement

வனப்பகுதியில் கட்டிடங்கள் அமைப்பது போன்ற விலங்குகள் வாழும் பகுதிகளில்  மனிதர்கள் இது போன்ற தேவையற்ற வேலைகளை செய்வது ஆபத்தில் தான் முடியும்.

இந்நிலையில் மஹாராஷ்டிரா ஆரே காலனியில் சிறுத்தை ஒன்று வழிதவறி சுற்றித்திரிந்தது  சி.சி.டி.வி-ல் பதிவாகி உள்ளது. அம்மாநில அரசு சார்பில் , சுற்றுச்சூழல் உணர்திறன் வாய்ந்த ஆரே காலனி காடுகளில் சர்ச்சைக்குரிய மும்பை மெட்ரோ கார் ஷெட்டை புதுப்பிக்க முடிவு செய்த சில நாட்காலே ஆன நிலையில் இந்த சம்பம் நடந்துள்ளது.

சிறுத்தை ஒன்று, கடந்த  வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆரே காலனியில் உள்ள கட்டிடத்தின் எல்லைச் சுவரைக் குதித்து கட்டிடத்தின் வளாகத்திற்குள் நுழைந்து பிரதான வாயில் வழியாக வெளியேறியது.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள சுமார் 2700 க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி மெட்ரோ பணிமனை அமைக்க முந்தைய மாநில அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போதைய அம்மாநில  அரசு மீண்டும் மணிமனை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் 2014 முதல் நடந்து வருகிறது.