“ஹே அப்பா…. இதை பண்ணிராத”பெண் குழந்தையின் பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்

303
Advertisement

அப்பா-மகள் இடையிலான பாசப்பிணைப்பு சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.பெண் பிள்ளைகள் எப்போதும் அப்பாக்களின் குட்டி  இளவரசி தான் .அப்பாக்கள் எப்போதும் பெண் குழந்தைகளின் நிஜ ஹீரோக்கள் தான்.

இது போன்று உணர்ச்சிவசப்படவைக்கும் தருணங்கள்  ஒருபுறம் இருக்கட்டும்.இவர்களின் சேட்டைக்களுக்கு அளவே இல்லை,அதுபோன்ற நேரங்களின் அம்மாக்களுக்கு வரும்  பாருங்க கோவம், வீடே இரண்டாகி விடும் அளவிற்கு வரும்.

ஆனால் இதை எதையுமே கண்டுக்காமல்  அப்பா மகள் இருவரும் ஹாப்பியா விளையாடிட்டு இருப்பாங்க.சில நேரத்தில தந்தைகளிடம் குழந்தைகள் ஒரு விசியத்திற்காக வாதிட்டுவது ரசிக்கும் படி இருக்கும்.ஒரு கட்டத்தில் குழந்தைக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியாமல் முழித்துக்கொண்டு இருப்பார் அப்பா.

இங்கும் அப்படி தான் இந்த குட்டி இளவரசி தன் தந்தையிடம் ஒன்று கூறுகிறார்.இதை கேட்கும் இணையவாசிகள் கவலை மறந்து சிறிது வருகின்றனர்.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,தன் மகளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து, காரில் வந்துகொண்டு இருக்கும்போது குழந்தை ஒரு கட்டத்தில் தன் இரு கைகளில் வைத்திருக்கும் ஐஸ் கிரீமை கார் ஓடிக்கொண்டு இருக்கும் தந்தையிடம் ஒரு நிமிடம்  பிடித்துக்கொள்ள சொல்கிறது.

அந்த தந்தையும் மகள் சொல்லிவிட்டால் என வாங்கிக்கொள்கிறார்.அவர் கையில் வாங்கிய அடுத்த நொடி அந்த குழந்தை சொன்னதை கேட்டு அந்த தந்தைக்கு  “wasted” என மீம்ஸ் போட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.

ஐஸ் கிரீமை  பிடித்துக்கொள்ள சொல்லும் அந்த குழந்தை,”ஹே.. அப்பா சாப்டராத ” என சிரியஸாக சொல்கிறது.குழந்தையின் இந்த ரசிக்கும்படியான பேச்சு இணையவாசிகளை  கவர்ந்த வருகிறது.வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ,பலரும் தங்கள் வீடுகளில் இருக்கும் குட்டி இளவரசிகள் செய்யும் சேட்டையான தருணத்தை பகிர்ந்து வருகின்றனர்.