Friday, April 18, 2025

அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்தியது ஜாகுவார்

அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல் இறக்குமதி மீது, 25 சதவீத வரி விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையில், அமெரிக்க சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் 400,000 வாகனங்களில் சுமார் 25% வாகனங்கள் அமெரிக்காவில் விற்கப்படுகின்றன.

Latest news