இனி Trainலயும் Food ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்

255
Advertisement

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். ரயிலில் போகும் போது மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய, ரயில் pantry எப்போதும் இயங்கி வருகிறது.

எனினும், மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவை, தாங்கள் தேர்வு செய்யும் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடும் வகையில் புதிய option ஒன்றை அளிக்கிறது ரயில்வே துறை.

6 மணியில் இருந்து 10 மணி வரையும் செயல்படும் IRCTCயின் e-catering சேவையில், PNR code மூலம் ஆர்டர் செய்து எந்த ரயில் நிலையத்தில் உணவு டெலிவெரி தேவை என்பதை குறிப்பிடவேண்டும்.

e-catering இணையத்தளம், Food on Track mobile app மற்றும் 1323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம். பணம் செலுத்த ஆன்லைன் அல்லது cash on  delivery options உள்ள இந்த திட்டத்தில், உணவு டெலிவரி செய்யப்படாவிட்டால் refund அளிக்கப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.