சாமானிய மனிதனின் அன்றாட வாழ்க்கையிலேயே முக்கிய பங்கு வகிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம், அரசாங்கத்தை நடத்துவதில் இன்றியமையாத அம்சமாகவே மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
கணினி மயமாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பம் பல கடினமான வேலைகளையும் சுலபமாக செய்ய உதவுகிறது. ஆனால், அத்தகைய விவரங்கள் Hackerகள் கையில் சிக்கினால், நிலைமையே தலைகீழாக மாறிவிடும்.
அண்மையில், கோவாவில் நடந்துள்ள சம்பவமே இதற்கு சான்று. கோவா அரசின் வெள்ள கண்காணிப்பு மையங்களின் சர்வர்களை முடக்கியுள்ள மர்ம கும்பல், அவற்றை ரிலீஸ் செய்ய பணயத்தொகையாக Bitcoinகளை கேட்டுள்ளனர்.
ஜூன் மாதமே நடந்த இந்த சம்பவத்தை பற்றிய செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான Antivrus பாதுகாப்பை உறுதி செய்யாமலும், Firewallஐ அப்டேட் செய்யாமலும் இருந்ததே, இது போன்ற சம்பவத்துக்கு வழி வகுத்துள்ளது என சைபர் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.