இணையச்செயலி மூலம் உணவு ஆர்டர் செய்வது பெரிதும் நன்மையாக பார்க்கப்பட்டாலும்,சில குறைகள், குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது.இந்நிலையில் உ.பி யில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள கிளப் ஒன்றின் உணவகத்தில், கிளப் உறுப்பினரான சித்தார்த் ஸ்ரீவஸ்தவா செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார்.அவர் ஆர்டர் செய்த உணவும் டெலிவெரி செய்யப்பட்டுள்ளது.பின் அதை திறந்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்தனர் அந்த குடும்பம்.
காரணம் அவர்கள் ஆர்டர் செய்த பன்னீருக்கு பதிலாக சிக்கன் குழம்பு வந்துள்ளது.கிளப்பின் உறுப்பினர் ஒருவருக்கே இது போன்று அலட்சியமாக உணவை மாற்றி அனுப்பியதில் ஆத்திரமடைந்த அந்த உறுப்பினர் உணவகத்தின் மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமண்டம்,சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.