வருடத்தில் இரண்டு முறை மட்டுமே ஷாப்பிங் செய்யும் அதிசய பெண்

347
Advertisement

வாரந்தோறும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்குவது பலருக்கும் சோர்வான ஒன்றாக இருக்கும். இங்கு ஒரு பெண் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஷாப்பிங் செய்கிறார் , இதற்கான காரணத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துஉள்ளார் .

அதில் , “நாங்கள் ஏழு பேர் கொண்ட குடும்பம், எங்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர், பொதுவாக யாரும் இதை செய்ய விரும்பமாட்டார்கள். ஆனால் இது எங்களுக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என்று நம்புகிறேன்.”

குடும்பத்தில் உணவு திட்டமிடுதல் , தேவை , அதற்கான ஏற்பாடு போன்று எனக்கு முக்கிய பங்கு உண்டு என கூறும் அவர் , அந்த வீடியோவில், உணவு பொருட்கள் , துப்புரவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களாலும் தனது சமையலறை நிரம்பியிருப்பதை காட்டுகிறார்.

குறிப்பாக , ஆறு ஜாடிகளில் ஆலிவ் எண்ணெய், ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசி, 20 பட்டைகள் வெண்ணெய், 10 டஜன் முட்டைகள், 22 பாக்கெட் பாஸ்தா என அணைத்து பொட்களும் உள்ளது .

பொதுவாக , மல்லிகை பொருட்களை சேமித்து வைக்க வீட்டில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுருக்கும். ஆனால் இவரோ இந்த பொருட்களை குளியலறை உள்பட வீட்டின் எல்லா இடங்களிலும் சேமித்துவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வெளியே சென்று உணவு உணர்வது அரிது தங்களுக்கு இது தான் தேவை என்கிறார் இந்த பெண்.