Monday, June 23, 2025

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. மாதத்தின் தொடக்கத்திலேயே ஹேப்பி நியூஸ்..!

ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.

அதாவது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் 1 முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையைக் குறைத்துள்ளன. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 24 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,881 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளது.

முன்னதாக, மே 1ஆம் தேதின்று வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 15 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக சிலிண்டர் விலையைக் குறைக்கப்பட்டிருந்தால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனம் வைத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்திலும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 41 ரூபாய் குறைக்கப்பட்டது.

அதேபோல,வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை நேற்று குறைக்கப்பட்டிருந்தாலும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி, சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை ரூ.868.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.

.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news