முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்

57

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் உடல் நலக்குறைவாக காரணமாக குருகிராமில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிக்கப்பட்டது.

உயிர்காக்கும் மருந்துகள் துணையுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 82 வயதான முலாயம்சிங் யாதவ், 10 முறை MLA-வாகவும், ஒரு முறை எம்.எல்.சியாகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement