Tuesday, April 22, 2025

சீனாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து : 20 பேர் பலி

வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மீட்பு பனியில் ஈடுபட்டனர். அப்போது 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest news