மகளின் பிறந்தநாளில் தந்தை செய்த செயல்

307
Advertisement

என்னதான் மகன்கள் இருந்தாலும், ஒரு தந்தைக்கு தன் மகள்தான் பிரியமானவள். தந்தை மகள் பாசப்பிணைப்பை உணர்த்தும் பல தருணங்களை நாம் பாத்துருபோம். ‘நான் பிறந்தபோது அம்மா பூரிப்படைந்தாள். அப்பா நீயோ அடுத்த நொடியில் இருந்து உனக்கான வாழ்வை விட்டுவிட்டு, எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாய்” என்று மகள்கள் தன் தந்தையை குறிப்பிடும் உணர்ச்சிபூர்வமான உறவு தான் தந்தை மகளின் உறவு.

மகளை மகிழ்விக்க தந்தைகள் செய்யும் பல வேடிக்கையான செயல்களை அனைவரும் ரசிப்பதுண்டு. இது போன்ற ஒரு வீடியோ தான் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

ஒரு தந்தை தன் மகளின் பிறந்தநாள் அன்று , என்காண்டோ என்ற குழந்தைகள் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான லூயிசா போன்று உடை அணிந்து தன் மகளை மகிழ்வித்துள்ளார் மேலும் அந்த திரைப்படத்தில் வருவது போலவே பிறந்தநாள் அலங்காரம் அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement

https://www.instagram.com/p/CbQ_i2tpa5B/

லூயிசா உடையில் வரும் அந்த தந்தை அத்திரைப்படத்தில் வரும் லுயிசாவின் செயகளை செய்கிறார்.அதவது வீரமான ஒரு பெண்ணாக லூயிசா கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கும் . அதேபோலவே தன் மகள்களை இரு கைகளில் உட்காரவைத்துக்கொள்கிறார் இந்த தந்தை.

இந்த வீடியோவை பகிர்ந்தவர் , இந்த ஆண்டின் சிறந்த அப்பா விருது இவருக்கே என்பது போன்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

மகள் மற்றும் தந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது . பலரும் உணர்ச்சிப்பூர்வமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.